×

2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ தோற்றதாக கூறிய பேஸ்புக் நிறுவனர்: ஒன்றிய அமைச்சர் வேதனை

புதுடெல்லி: பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘‘கொரோனாவுக்கு பிறகு உலகின் அனைத்து நாடுகளின் அரசாங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர். கொரோனாவை எதிர்கொண்ட விதம், அந்த சமயத்தில் அரசுகள் எடுத்த பொருளாதார மற்றும் பிற கொள்கை முடிவுகள் மக்களுக்கு அதிருப்தி அளித்தன. அதனால் 2024ல் தேர்தல் நடந்த இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் ஆளுங்கட்சி தோல்வியை தழுவியது’’ என்றார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘‘பேஸ்புக் நிறுவனரிடமிருந்து இதுபோன்ற தவறான தகவல் வருவது வேதனை அளிக்கிறது. 2024 தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீதான நம்பிக்கையை இந்திய மக்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினர். உண்மைகள், நம்பகத்தன்மையை நிலைநிறுத்துவோம்’’ என்றார்.

The post 2024 மக்களவை தேர்தலில் ஆளும் பாஜ தோற்றதாக கூறிய பேஸ்புக் நிறுவனர்: ஒன்றிய அமைச்சர் வேதனை appeared first on Dinakaran.

Tags : Facebook ,BJP ,2024 Lok Sabha elections ,Union Minister ,New Delhi ,Mark Zuckerberg ,Corona ,Dinakaran ,
× RELATED கட்சிப்பணத்தை சீமான் வட்டிக்கு...