×

போட்டோ எடுத்த போது குறுக்கிட்ட தொண்டரை காலால் எட்டி உதைத்த பாஜ தலைவர்

சத்ரபதி சம்பாஜிநகர்: மகாராஷ்டிரா தேர்தலை ஒட்டி பாஜ மூத்த தலைவரும் ஒன்றிய மாஜி அமைச்சருமான ராவ்சாகேப் தன்வே, பிரசாரம் செய்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை ஜால்னா மாவட்டத்தில் உள்ள போகர்தான் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அங்கு சிவசேனா வேட்பாளர் அர்ஜுன் கோட்கரை சந்தித்த தன்வே அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது அருகே நின்றிருந்த பாஜ தொண்டர் ஒருவர், தலையை நுழைத்தார். இதனால் கடுப்பான தன்வே, அந்த நபரை காலால் எட்டி உடைத்து விலகி நிற்கும் படி கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

The post போட்டோ எடுத்த போது குறுக்கிட்ட தொண்டரை காலால் எட்டி உதைத்த பாஜ தலைவர் appeared first on Dinakaran.

Tags : BJP ,Chhatrapati ,Sambhajinagar ,Union minister ,Rao Saheb Dhanve ,Maharashtra elections ,Bogartan ,Jalna district ,Shiv Sena ,Arjun Kotkar ,
× RELATED நவ. 25 முதல் இன்று வரை ஓயாத போராட்டம்;...