×

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் பால் வளத் தொழில்நுட்பக் கல்லூரியும், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையும் இணைந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக உணவே மருந்து மற்றும் நலம்தரா உணவு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையின் மாவட்ட நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் குமரவேலு, கல்லூரி உதவி பேராசியர்கள் மாதங்கி, நித்யலட்சுமி, பேராசிரியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மாணிக்கவாசகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் நலம்தரா உணவுகளின் பக்க விளைவுகளையும், ஆரோக்கியமான உணவுகள் குறித்தும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெகதீஷ் சந்திர போஸ் எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி, விழிப்புணர்வு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Tamil Nadu Veterinary Science University College of Food and Dairy Science ,Ellapuram Panchayat Union ,Thiruvallur District ,Tamil Nadu Department of Food Safety and Drug Administration ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!