×

குட்கா கடத்திய ஊராட்சி செயலாளர் கைது: பைக் பறிமுதல்

ஊத்துக்கோட்டை: ஆந்திர மாநிலத்தில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக குட்கா கடத்திச் செல்வதாக மாவட்ட எஸ்பி.சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்ததது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலிசார் நேற்று ஊத்துக்கோட்டை அண்ணாசிலை அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பகுதியில் இருந்து வந்த வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். இதில் சந்தேகப்படும்படி வந்த ஒரு பைக்கை சோதனை செய்தபோது அதில் ஒரு பையில் குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்து ஊத்துக்கோட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் குட்கா கடத்தி வந்தவர் விளாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நசீர் (42) என்பதும், இவர் விஷ்ணுவாக்கம் ஊராட்சிச் செயலாளராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post குட்கா கடத்திய ஊராட்சி செயலாளர் கைது: பைக் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Gutka ,Oothukottai ,SP ,Srinivasa Perumal ,Andhra ,Special Police Force ,Uthukottai Annasil ,
× RELATED பேராவூரணி பேரூராட்சி கூப்புலிக்காடு மயானத்தில் மரக்கன்றுகள் நடவு