×

ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு மீது தாக்குதல்: போதை பெண்ணிடம் விசாரணை

அம்பத்தூர்: திருமுல்லைவாயல் அடுத்த எஸ்.எம்.நகர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ரமேஷ் (45). கொரட்டூர் காவல் நிலையத்தில் தலைமை, காவலராக பணபுரியும் இவர், நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த காரை பார்த்தார்.

அதில் 2 பெண்கள், ஒரு ஆண் இருப்பது தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்களை அங்கிருந்து புறப்படுமாறு ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். இதனால், காரில் இருந்த ஒரு பெண் ஆத்திரமடைந்து, ரமேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post ரோந்து பணியில் ஈடுபட்ட ஏட்டு மீது தாக்குதல்: போதை பெண்ணிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Ramesh ,S.M. ,Nagar police station ,Thirumullaivayal ,Korattur police station ,Korattur Water Canal Road… ,
× RELATED குடிபோதையில் காவலரை தாக்கிய பெண்