×

சோழவரம் அருகே உள்ள கோயிலில் உண்டியல் பணம் திருட்டு

புழல்: சோழவரம் அருகே உள்ள சோத்து பெரும்பேடு கிராமத்தில் பழமை வாய்ந்த தேவி பூதேவி சமேத லட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு கதவுகளை பூட்டிவிட்டுச் சென்ற பூசாரி நேற்று காலை வந்து பார்த்தபோது கோயில் வளாகத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து பார்த்தபோது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அருகில் சில்லறைகள் சிதறிக் கிடந்தது தெரிய வந்தது. இதில் சுமார் ரூ.5000 திருடு போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து சோழவரம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயிலில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

The post சோழவரம் அருகே உள்ள கோயிலில் உண்டியல் பணம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Cholavaram ,Bhoodevi ,Sametha Lakshmi Narayanan Perumal ,Chothu Perumapedu ,
× RELATED கட்டிட பணி முடிந்து இரவு தூங்கிய...