×
Saravana Stores

குடும்ப செலவுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் தாய், மகன் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: குடும்ப செலவுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் தாய்-மகனை சரமாரியாக தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவரது மனைவி சுல்தானா (37). இந்நிலையில் கடந்த மாதம் சுல்தானாவின் உறவினரான அம்பத்தூரைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவரின் மகன் அன்வர் (30) என்பவர் தனது குடும்ப செலவுக்காக சுல்தானாவிடம் தங்க நகையை வாங்கிச் சென்றுள்ளார். இதனையடுத்து வாங்கிய நகையை திருப்பித் தருமாறு சுல்தானா கேட்டதற்கு அன்வர் தொடர்ந்து காகம் தாழ்த்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் தனது அண்ணன் அப்பாஸ் மற்றும் நண்பர் சோமு ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் ஆட்டோவில் வந்த அன்வர், சுல்தானாவையும் அவரது மகனையும் தகாத வார்த்தைகளால் பேசியதோடு ஆட்டோவில் மறைத்து வைத்திருந்த இரும்பு ராடை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், நகையை திருப்பிக் கேட்டால் உனது மகனை ஒரு வாரத்தில் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து சுல்தானா புல்லரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்வர், சோமு மற்றும் அப்பாஸ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

The post குடும்ப செலவுக்காக கொடுத்த நகையை திருப்பி கேட்டதால் தாய், மகன் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Zakir Hussain ,Pullarambakkam ,Sultana ,
× RELATED திருவள்ளூரில் பரபரப்பு ஆக்கிரமித்து...