×
Saravana Stores

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி

சென்னை: சென்னை உட்பட நாளை 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;

சென்னை உட்பட நாளை 12 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை, நாளை மறுநாள் கனமழை பெய்யும். அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டை நோக்கி நகர்கிறது.

வடதமிழ்நாட்டை ஒட்டிய கடற்பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட ஒரு சதவீதம் குறைவாகவே பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

The post காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைய வாய்ப்பில்லை: தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : South Zone Meteorological Survey Centre ,Balachandran ,Chennai ,South Zone Meteorological Centre ,
× RELATED வடதமிழ்நாட்டை ஒட்டி காற்றழுத்த...