திருப்பூர், நவ.12: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 482 மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் தாட்கோ சார்பில் தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் கீழ் இயற்கை மரணம் அடைந்த 2 தூய்மைப்பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன், திட்ட இயக்குநர் (மகளிர்த்திட்டம்) சாம்சாந்தகுமார், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரஞ்சித்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த தூய்மை பணியாளர்களின் வாரிசுக்கு நிதி appeared first on Dinakaran.