×
Saravana Stores

பருவமழை காரணமாக வைரஸ் காய்ச்சல்

 

திருப்பூர்: தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை தொடங்கி மிதமான மழை முதல் அதி கன மழை வரை பெய்து வருகிறது. இதன் காரணமாக பருவ மாற்றம் ஏற்பட்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. தற்போதுள்ள பருவமழைக்கேற்றவாறு சளி மற்றும் வறட்டு இருமலுடன் கூடிய காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரையில் உள்ளவர்கள் வைரஸ் காய்ச்சலுக்கு அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

அரசு மருத்துவமனை மட்டுமல்லாது தனியார் மருத்துவமனைகளிலும் அதிக அளவு குழந்தைகள் சளி வறட்டு இருமலுடன் கூடிய காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அரசு மருத்துவர் கூறுகையில், பருவமழைக்கேற்றவாறு வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. சளி மற்றும் வறட்டு இரும்பலுடன் கூடிய காய்ச்சலாக வருகின்றது. வறட்டு இருமல் ஒரு வார காலம் நீடிக்கக் கூடியதாக உள்ளது. சளி மற்றும் இருமல் இருந்தால் அலட்சியும் கொள்ளாமல் உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள காய்ச்சலுக்கு ஏற்றவாறு மருந்து மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. எனவே குழந்தைகளின் பெற்றோர்கள் சளி மற்றும் இருமல் இருந்தால் அலட்சியம் காட்டாமல் உடனடியாக அரசு மருத்துவமனையோ அல்லது வேறு மருத்துவர்களையோ அணுகி பரிசோதனை மேற்கொள்ளலாம். உடனடியாக கவனிக்கவிட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. சிறுவர்கள் சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருக்கும்போது இவை உடனடியாக மற்ற சிறுவர்களுக்கும் தொற்றக்கூடிய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தனர்.

The post பருவமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tamil Nadu ,
× RELATED பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில்...