×

பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.8: டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகளை பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக சிஐடியு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்க செயலாளர் அன்பு தலைமை வகித்தார். சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் திருச்செல்வம். சிஐடியு மாவட்ட தலைவர் மூர்த்தி, மாவட்டச் செயலாளர் ரங்கராஜ், சிஐடியு மாநில குழு உறுப்பினர் சம்பத், மாவட்டத் துணைத் தலைவர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், டாஸ்மாக் கடைகளில் மாமூல் கேட்டு தொந்தரவு செய்பவர்களையும், அதற்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளையும் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

The post பணியிட மாற்றம் செய்ததை கண்டித்து டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Tirupur ,CITU ,Tirupur District Collector ,District Tasmac Employees Union ,Anbu ,CITU Tasmac ,Tasmac Employees' Union ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் அனைத்து மதுபான...