- பழவேக்காடு ஊராட்சி
- பொன்னேரி
- திருவள்ளூர் மாவட்டம்
- 15 வது நிதி கமிஷன்
- பெரிய தெரு
- சிந்தி வடை தெரு
- பாலாவேக்காடு
- பஞ்சாயத்து
- தின மலர்
பொன்னேரி. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட பெரிய தெரு மற்றும் ஒற்றை வாடை தெருவில் சமூக வளர்ச்சி நிதி ரூ.9.50 லட்சம் மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதியில் இருந்து ரூ.9.50 மதிப்பீட்டில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒற்றை வாடை தெருவில், மிக பழமையான மார்கெட்டில் இருந்து பனை ஓலைகளால் செய்யப்பட்ட கைவினை பொருட்கள் மற்றும் கைத்தறி ஆடையான லுங்கிகள் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பழவேற்காட்டின் பழமையை எடுத்துச் சொல்லும் விதத்தில் அமைந்துள்ள பெரிய தெரு மற்றும் ஒற்றை வாடை தெருவில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் அனைத்து தரப்பு மதத்தினரும் கலந்துகொண்டனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி பூமி பூஜையினை துவக்கி வைத்தார். இதில், ஒன்றிய கவுன்சிலர் எம்.கே.தமின்சா, பழவேற்காடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரவி, வார்டு உறுப்பினர்கள் அப்துல் சம்மது, முஜ்ஜிப்பு, துராபுதீன், திமுக நிர்வாகிகள் கன்னிமுத்து, அசோகன், சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post பழவேற்காடு ஊராட்சியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி தொடக்கம் appeared first on Dinakaran.