- திருவொற்றியூர் வடுடையம்மன் கோவில் தெப்பக்குளம்
- திருவொற்றியூர்
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்
- Thirukkulam
- வடுடையம்மன் கோவில்
- திருவொற்றியூர் சன்னதி தெரு, சென்னை
- திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவில்
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் குளத்தில் தேங்கிக் கிடந்த பிளாஸ்டிக், பேப்பர்கள் கழிவுகள் அகற்றப்பட்டன. சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவில் உள்ள வடிவுடையம்மன் கோயிலில் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர்கள் கழிவுகள் நிறைந்து காணப்பட்டது. இதனால் வேதனை அடைந்த பக்தர்கள், ‘’ கோயில் குளத்தை தூய்மைப்படுத்தி சீரமைக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில், வடிவுடையம்மன் கோயில் திருக்குளத்தை சீரமைக்கும் ‘’மாஸ் கிளீனிங்’’ நிகழ்ச்சி மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமையில் நடைபெற்றது.
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குளத்து நீரில் மிதந்துகொண்டிருந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், பேப்பர் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தினர். ‘’திருக்கோயில் குளத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கழிவுகளை வீச வேண்டாம்’’ என்று பொதுமக்களை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரி வேளாங்கண்ணி, என்விரோ, கௌதம், விக்கி கலந்துகொண்டனர்.
The post திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தெப்பகுளத்தில் தேங்கிய பிளாஸ்டிக், பேப்பர்கள் அகற்றம் appeared first on Dinakaran.