கிருஷ்ணகிரி நகரில் இருந்து தொலை தூர நகரங்களுக்கு செல்வதற்கு அரசு விரைவு பஸ்கள் கிடையாது. கிருஷ்ணகிரியில் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். அதேபோல, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி: தொலைதூர நகரங்களுக்கு கிருஷ்ணகிரியில் இருந்து அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகவே செல்கின்றன.
அதேபோல பெங்களூருவில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பஸ்கள் செல்கின்றன. இதைத் தவிர, கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி, சேலம், ஓசூர், அரூர், ஊத்தங்கரை, திருவண்ணாமலை உள்பட பல நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், கிருஷ்ணகிரி நகரில் இருந்து தொலை தூர நகரங்களுக்கு செல்வதற்கு அரசு விரைவு பஸ்கள் கிடையாது. கிருஷ்ணகிரியில் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள், பணி நிமித்தமாக தங்கி உள்ளனர். அதேபோல, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியை சுற்றிலும் ஏராளமான கிரானைட் தொழிற்சாலைகள் உள்ளதால், பல்வேறு தொழில் நிமித்தமாகவும் வெளியூர்வாசிகள் கிருஷ்ணகிரிக்கு தினமும் வந்து செல்கின்றனர். இவ்வாறு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கிருஷ்ணகிரியில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவை, திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களுக்கு வசதியாக, கிருஷ்ணகிரியில் இருந்து அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுவதில்லை. மாறாக பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக வரக்கூடிய அரசு விரைவு பஸ்களில் மட்டுமே, கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் பெங்களூரு, ஓசூரில் பயணிகள் பஸ் இருக்கையில் முழுமையாக அமர்ந்து விடும் பட்சத்தில், அரசு விரைவு பஸ்கள் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.
அந்த பஸ்கள் சுங்கச்சாவடியில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகின்றன. இதனால் கிருஷ்ணகிரி பகுதி மக்கள், வெளியூர்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதே போல, கிருஷ்ணகிரியில் அரசு போக்குவரத்து கழக முன்பதிவு மையமும் இல்லை. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பல நேரங்களில் ஓசூரில் இருந்து, டிக்கெட் முன்பதிவு செய்து, கிருஷ்ணகிரியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கிருஷ்ணகிரி பஸ் நிலையத்தில் இருந்து, தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கும், திருச்சி, கோவை போன்ற ஊர்களுக்கும் அரசு விரைவு பஸ்கள் இயக்கினால் பயனாக இருக்கும் என்று கிருஷ்ணகிரியில் வசிக்கும் வெளியூர்வாசிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
The post கிருஷ்ணகிரியில் இருந்து தொலைதூர நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.