×

டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மருத்துவமனை நிர்வாகம்

தேனி : போதிய மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் இருப்பதாகவும், டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை என்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர்கள் இல்லை என நோயாளிகள் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், தொடர் மழை, வெயில் பாதிப்பு மற்றும் கலங்கிய குடிநீர் விநியோகத்தால் வைரஸ் காய்ச்சல் வழக்கத்தை விட 70% அதிகரித்துள்ளதாக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். உள்நோயாளிகள் பிரிவில் குழந்தைகள் பெண்கள் உட்பட 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் குடிநீரைக் காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி இருக்கிறோம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

The post டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை: மருத்துவமனை நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Theni ,Periyakulam government hospital ,Dinakaran ,
× RELATED அரையாண்டு தேர்வு விடுமுறையை...