அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண், கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில எனது தங்கையான 16 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் ஜிம் பயிற்சியாளர் நைனா முகமது (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
அப்ேபாது, ஆசைவார்த்தை கூறி சிறுமிக்கு நைனா முகமது பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், தனிப்படை போலீசார் நேற்றுமுன்தினம் சிங்காரப்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்த நைனா முகமதுவை பிடித்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, அவரை கைது செய்தனர். பின்னர், போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சிறுமிக்கு பாலியல் தொல்லை; ஜிம் மாஸ்டர் கைது appeared first on Dinakaran.