×

மருத்துவமனை செயல்பாடு பற்றி மக்கள் கருத்தை பெற வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு

சென்னை: பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்தும் விதமாக அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நோயாளிகளிடம் கருத்து படிவத்தை அந்தந்த மருத்துவமனை பொறுப்பு அதிகாரிகள் பெற வேண்டும். படிப்பறிவு குறைவாக உள்ள நோயாளிகளிடம் விளக்கம் தந்த பிறகு படிவத்தை நிரப்ப வேண்டும். யாரையும் கட்டாயப்படுத்தி இந்த படிவத்தை நிரப்பக் கூடாது.

மருத்துவ அதிகாரிகள் வாரத்திற்கு 10 நோயாளிகளிடமிருந்து படிவத்தை பெற வேண்டும், பெற்ற படிவத்தை பொது சுகாதாரத் துறை மின்னஞ்சலுக்கு வரும் 14ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளது. படிவத்தில் மருத்துவமனைகளின் செயல்பாடுகள், சிகிச்சைகள், மருத்துவர்கள் செயல்பாடுகள், உள்நோயாளிக்கு வைக்கப்பட்டுள்ள பராமரிப்புகள், வெளியேற்றம் செயல்முறைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post மருத்துவமனை செயல்பாடு பற்றி மக்கள் கருத்தை பெற வேண்டும்: பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Public Health ,Chennai ,Selva Vinayak ,Tamil Nadu ,Public ,Health ,
× RELATED சென்னை மாநகராட்சியில் சுகாதார...