×
Saravana Stores

தெலங்கானாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம்

திருமலை: தெலங்கானாவில் கட்டிய கோயிலில் உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.  தெலங்கானா மாநிலம், ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா. இவர் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர ரசிகர் ஆவார். டிரம்ப்பிற்கு இந்தியா, தெலங்கானா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் மீதுள்ள அன்பால் கிருஷ்ணா கடந்த 2019ம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருந்தபோது கிருஷ்ணா தனது வீட்டிலேயே அவருக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு கிருஷ்ணா உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணா வீட்டில் உள்ள டொனால்ட் டிரம்ப் சிலைக்கு நேற்று பால் அபிஷேகம் செய்து மலர் மாலை அணிவித்து கொண்டாடி அவருக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வழங்க வேண்டி கொண்டார். டிரம்பிற்கு கோயில் கட்டிய, கிருஷ்ணாவின் நினைவு மற்றும் பக்தியை போற்றும் வகையில் கிராம மக்கள் சேர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியை கொண்டாடியதாக கிராம மக்கள் கூறினர்.

 

The post தெலங்கானாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : US President Trump ,Telangana ,Tirumala ,US President Donald Trump ,Bussa Krishna ,Konneva village ,Janagam district ,
× RELATED மையோனைஸ் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை : தெலங்கானாஅரசு அதிரடி தடை