×
Saravana Stores

புதுவை டூ பெங்களூரு, ஐதராபாத் டிச.20ம் தேதி முதல் விமான சேவை

புதுச்சேரி: புதுவையில் இருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு டிச.20ம் தேதி முதல் விமான சேவை துவங்குவதாக விமான நிலைய இயக்குனர் ராஜசேகர் ரெட்டி கூறியுள்ளார். புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் கடந்த 2013ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. இந்தப் பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மீண்டும் விமான சேவை செயல்பட துவங்கியது.

இந்த நிலையில், புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூரு, ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ம் தேதியுடன் தனியார் நிறுவனம் (ஸ்பைஸ் ஜெட்) நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை.  புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை துவங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தனியார் விமான நிறுவனத்துடன் (இண்டிகோ) பேச்சுவார்த்தை நடத்தியது. இந்நிலையில், புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை அடுத்து மாதம் தொடங்க உள்ளது.

அதன்படி நாள்தோறும் பெங்களூரிலிருந்து காலை 11.10 மணிக்கு விமானம் புறப்பட்டு, மதியம் 12.25 மணிக்கு புதுவைக்கு வருகிறது. பின்னர் மாலை 5.10 மணிக்கு புதுவையிலிருந்து புறப்பட்டு, மாலை 6.35 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது. இதேபோல் மதியம் 12.45 மணிக்கு புதுவையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2.30 மணிக்கு ஐதராபாத் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 3.05 மணிக்கு ஐதராபாத்திலிருந்து புறப்பட்டு, மாலை 4.50 மணிக்கு புதுவைக்கு வந்தடைகிறது.

The post புதுவை டூ பெங்களூரு, ஐதராபாத் டிச.20ம் தேதி முதல் விமான சேவை appeared first on Dinakaran.

Tags : Puduy ,Bangalore, Hyderabad ,Puducherry ,Rajasekar Reddy ,Puduwa ,Bangalore ,Hyderabad ,Puducherry Laspate ,Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி