×

சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது

சென்னை: கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து அனுமதியின்றி அண்ணாசாலையில் போராட்டம் நடத்த முயன்ற அர்ஜூன் சம்பத், அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். கனடா நாட்டில் இந்து கோயிலுக்கு சென்ற இந்துக்கள் மீது அந்நாட்டில் வசித்து வரும் காலிகிஸ்தான் ஆதரவார்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதற்கிடையே கனடா நாட்டில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, இந்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் உள்ள கனடா தூதரகம் முற்றுகையிடப்படும் என்று அறிவித்தது. ஆனால் கனடா தூதரகம் அருகே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நேற்று அண்ணாசாலையில் உள்ள தாராப்பூர் டவர் அருகே ஒன்று கூடினர்.

இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் திட்டமிட்டப்படி இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் அவரது கார் டிரைவர் உட்பட 11 பேர் ஒன்று கூடி, கனடா நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பியபடி போராட்டம் நடத்தினர். அதைதொடர்ந்து சிறிது நேரத்தில் போராட்டம் நடத்திய அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது கார் டிரைவர் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் அனுமதியின்றி போராட்டம் அர்ஜூன் சம்பத், கார் டிரைவருடன் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Arjun Sampath ,Annasalai ,Hindu ,Canada ,
× RELATED திருவல்லிகேணி, சிந்தாதிரிப்பேட்டை,...