×

திமுக கூட்டணி வலுவாக இருந்தால் தான் பாஜவிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு

திருப்புவனம்: திமுக கூட்டணியால் தான் பாஜவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் நேற்று நடந்த படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: பாஜ அரசு பல்வேறு மக்கள் விரோத திட்டங்களை நிறைவேற்ற போகிறது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மூலம் அம்பேத்கர் கட்டமைத்த அரசியல் சட்டத்தின் அடிப்படையையே மாற்ற போகிறார்கள்.

ஒரு மாநிலத்தில் உட்கட்சி விவகாரங்களால் ஆட்சி கவிழ்ந்தால், அடுத்த 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் வரும்போது தான், ஆட்சி கவிழ்ந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறும். அதுவரை குடியரசு தலைவர் ஆட்சி, கவர்னர் ஆட்சி தான் நடக்கும். படிப்படியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று கூட அறிவிப்பார்கள்.

குடியுரிமை சட்டம் கொண்டு வருகிறார்கள். வக்பு வாரிய சொத்துக்களை எல்லாம், அரசு சொத்துக்களாக மாற்றி சிறுபான்மை, பெரும்பான்மை மக்களிடையே மோதலை உருவாக்கும் ஆட்சியாக மோடி ஆட்சி உள்ளது. திமுக கூட்டணி வலுவாக இருந்தால் தான் பாஜவிடம் இருந்து நாட்டை காப்பாற்ற முடியும்.

The post திமுக கூட்டணி வலுவாக இருந்தால் தான் பாஜவிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியும்: கே.பாலகிருஷ்ணன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Dimuka ,Bajaj ,K. Balakrishnan ,Marxist ,Communist Party ,Secretary of State ,MARXIST COMMUNIST STATE ,SIVAGANGA DISTRICT, THIRUPUVANAM ,Dimuka alliance ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களையும்...