×

திருப்பூரில் கைதான வங்கதேச வாலிபர் புழல் சிறையிலடைப்பு

திருப்பூர்: திருப்பூர் அனுப்பர்பாளையத்தை அடுத்த ஆத்துப்பாளையம் ரோடு, மாரியம்மன் கோயில் வீதியில் உரிய ஆவணங்கள் இன்றி வங்கதேச வாலிபர் ஒருவர் தங்கி இருப்பதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர், வங்கதேசத்தை சேர்ந்த சஞ்சன்சந்தர் பர்மான் (33) என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூரில் தங்கி இருந்ததும், கடந்த 5 மாதங்களாக அனுப்பர்பாளையம்புதூர்- 15 வேலம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது. அசாமில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து அவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்று, புழல் சிறையிலடைத்தனர்.

The post திருப்பூரில் கைதான வங்கதேச வாலிபர் புழல் சிறையிலடைப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruppur THIRUPPUR ,VELAMPALAYAM POLICE ,ATHUPPALAYAM ROAD ,MARYAMMAN TEMPLE ROAD ,THIRUPPUR ,Tiruppur ,Dinakaran ,
× RELATED குமரியில் 30ம் தேதி முதல் ஜனவரி 1 வரை...