×

ரூ.130 கோடியில் சீரமைப்பு பணிகளால் புத்துயிர் பெற்ற சுருளியாறு மின் உற்பத்தி நிலையம்

*ஓராண்டாக சீரான மின்உற்பத்தி

சின்னமனூர் : ரூ.130 கோடியில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளால் சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் புத்துயிர் பெற்று சிறப்பாக இயங்கி வருகிறது.சின்னமனூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வரிசையில் ஹைவேவிஸ் பேரூ ராட்சி உள் ளது.இங்கு மேகமலை, மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகராஜன்மெட்டு, இரவங்கலாறு என 7 மலைக் கிராமங்களில் சுமார் 8500 பேர் தொழிலாளர்கள் உட்பட பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.அரசையும் விவசாயிகளையும் உயர்த்தும் தேயிலை, ஏலம், காப்பி, மிளகு என பணப்பயிர்கள் வருடப் பயிராக விளைவி த்து எடுத்து வருகின்றனர்.

மேற்படி எஸ்டேட் தோட்டங்கள் தவிர்த்து 1.50 லட்சம் அளவு ஏக்கரில் அடர்ந்த வனப்பகுதி மற்றும். பாதுகாக்கப்பட்ட வன த்தோடு யானைகள்,வரிப் புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, சிங்கவால் குரங்குகள், காட்டுமாடுகள், கரடிகள், மான் இனங்கள், வரிக்குதிரைகள் என ஏராளமான வி லங்குகளும் வாழ்வதால் சின்னமனூர் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.கடந்த 1969ம் ஆண்டு திமுக ஆட்சியில் கள ஆய்வு மேற்கொண்டு ஏரிகளின் இடையே ஐந்து மெகா அணைகள் உருவாக்கி, ஒட்டுமொத்த தண் ணீரை அணைகளில் தேக்கி மின் உற்ப த்தி செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அப்படி தீர்மானித்து எதிர்காலத் திட்டமாக திமுக ஆட்சியில் கட்டப்பட்டது தான் ஹைவேவிஸ், தூவானம், மணலாறு, வெண்ணியாறு, இரவங்வாறு என ஐந்து மெகா அணைகளும் கட்டி முடிக்கப் பட்டது.மேற்கொண்டு ஒவ்வொரு அணைக்கும் தொடர்பாக பூமிக்கு அடியில் சுரங்கப் பாதைகள் அமைத்து தண்ணீரை தூவானம் கொண்டு சென்று அங்கிருந்து மணலார், வெண்ணியார் அணைகள் வழியாக அணையில் சேர்த்து ஒட்டு மொத் தமாக இரவங்கலார் அணையில் சேர்க்கப்பட்டு நிரப்பபடுகிறது.

அங்கிருந்து ஒற்றைக் குழாயின் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் மகராஜன் மெட்டு வழியாக லோயர்கேம்ப் அருகில் சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் கட்டப் பட்டு அங்கு தினம் தோறும் 35 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று பணிகள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இப்பணிகள் முடிந்தவுடன் 1978ம் ஆண்டு அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற எம்ஜிஆர் துவக்கி வைத்தார்.

தொடர்ந்து மின்சாரம் இயக்க தண்ணீர் செல்லும் இக்குழாய் பாதையின் வழியாக சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு திடீரென மகராஜன் மெட்டு வழியாக வின்ச் பகுதியில் சுமார் 220 மீட்டர் அளவில் குழாய் ஏர்லாக் ஏற்பட்டு வெடித்து உடைந்ததால் தண்ணீர் செல்வது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இக்குழாய் உடைந்ததால் தண்ணீர் அனுப்பிட முடியாததால் தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி செய்வது முற்றிலும் நிறுத்தப்பட்டு தடையாக கிடந்தது. இதனால் இந்த ஒன்றரை ஆண்டுகளாக மேற்படி ஐந்து அணைகளிலும் மழைநீர் தேக்கப்பட்டு வீணாக நிற்பதும் சூரிய வெயிலின் வெப்பத்தால் தண்ணீர் குறைவதுமாக நிலை நீடித்து வந்தது. இது குறித்து தினகரன் குழாய் உடைப்பு செய்தியை படத்துடன் விரிவாக வெளியிட்டது.

இதன் எதிரொலியாக உடனடியாக தமிழக அரசின் மின்வாரியத்துறையினர் அப்பகுதியை நேரில் ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்து அறிக்கையாக அரசிற்கு அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட மின் வாரியத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மகாராஜன் மெட்டு மலைப் பகுதிகளில் உடைப்பு குழாய்களை மேலும் ஆய்வு செய்தனர். அதில் அந்த மெகா உருக்கு குழாயில் 220 மீட்டர் நீளம் விரிசல் ஏற்பட்டு நீண்ட உடைப்பை கண்டுபிடித்தனர். மேலும் அந்த குழாய் நீண்ட வருடங்கள் இயங்கி வந்ததாலும் சுருளியாறு மின் உற்பத்தி செய்யும் இயந்திரங்களும் சேர்ந்து பழுதாகியதும் தெரிய வந்தது. அந்த ஆய்வின் இறுதி திட்ட அறிக்கை தயார் செய்து அரசிற்கு அனுப்பியது

.ரூ.130 கோடியில் சீரமைப்பு பணிகள்:

பொதுமக்களின் நலன் கருதி உடனடி மின் தேவைக்கும் 220 அடி நீளம் கொண்ட குழாய் உடைப்பை அகற்றி பதிலாக புதிய குழாய் பல்வேறு போராட்டங்களுக்கிடையே மெகா இயந்திரத்தின் உதவியால் சரிந்து இருக்கும் உயர்ந்த மலை பகுதியில் பொருத்தப்பட்டது. கையோடு சுருளியாறு மின் உற்பத்தி நிலையத்தில் இருக்கும் பழுதுகளையும் பல மாதங்களாக ஈடுபட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தனர். அதற்காக அரசு போர்க்கால நிதியாக ரூ.130 கோடியை ஒதுக்கி செய்து பணிகள் செய்ய உத்தரவிட்டதால் விறு விறுவென பணிகள் நடந்து முடிந்தது. அதன்படி 7 மாதமாக மேற்படி பணிகளை சறுக்கு மலைப்பகுதி இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக அதிகாரிகள் சம்பந்தபட்ட தொழிலாளர்கள் டெக்னீஸியன்கள் என தீவிரமாக உடைப்பு குழாய் அகற்றி புதிய குழாய் இணைத்து, பழுதான மின் உற்பத்தியாகும் மெகா இயந்திரங்களும் பழுது நீக்கி புதுபித்து நடவடிக்கை எடுத்து முடித்தனர். ஏற்கனவே 35 மெகா வாட் மின் உற்பத்திக்கு பதில் முதல் கட்டமாக 20 மெகா வாட் மின் உற்பத்தி தயாரிக்கும் பணி துவங்கி தங்கு தடையின்றி சரியாக 14 மாதங்களை கடந்து தமிழ்நாட்டிற்கு ஒளியையும் பல தொழில்களுக்கு மின் சப்ளையையும் தொடர்ந்து தந்து வருகிறது.

ஒளிரும் தமிழகம்:

தொடர்ந்து 20 மெகா வாட் மின் உற்பத்தியை துவங்கி இடைவிடாமல் தொய்வின்றி சீராக நடந்து வருகிறது. மேலும் அதிக மின்சாரம் தேவைப்படும் போது கூடுதலாக அவ்வப்போது 20திலிருந்து 35 மெகா வாட் மின் உற்பத்தியையும் பெருக்கி நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஹைவேவிஸ் உயர்ந்த மேற்கு மலை தொடர்ச்சியில் பெய்யும் இயற்கை மழையால் ரூ.130 கோடியில் புதுபிக்கப்பட்ட பணிகள் நிறைவு செய்த பின்னும், மின் உற்பத்தி துவங்கி ஓராண்டையும் கடந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஹைவேவிஸ் சுருளியாறு மின் உற்பத்தி தமிழகம் முழுவதும் இரவினை பகலாக்கி பலருக்கும் வெளிச்சம் தந்து மின் மிகை மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இது குறித்து மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரூ.130 கோடியில் புதுபிக்கப்பட்டு தடையின்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மகாராஜன் மெட்டு வழியாக செல்லும் மெகா உருக்கு குழாய் உடைப்பு, மின் உற்பத்தி இயந்திரங்கள் பழுது நீக்கி புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடமாக 20 மெகாவாட் மின் உற்பத்தி துவக்கி படிப்படியாக தேவைக்கு ஏற்றார் போல் 35 மெகா வாட் மின் உற்பத்தியும் வடகிழக்கு பருவமழையால் அதிகரித்து வருகிறோம். வடகிழக்கு பருவ மழையால் தண்ணீரின் அளவும் அதிகரித்திருப்பதால் 35 மெகா வாட் மின்சார உற்பத்தியை தேவைக்கு ஏற்றார் போல் அதிகப்படுத்துவோம் 14 மாதங்களை கடந்தும் சீராக உள்ளது’’என்றார்.

The post ரூ.130 கோடியில் சீரமைப்பு பணிகளால் புத்துயிர் பெற்ற சுருளியாறு மின் உற்பத்தி நிலையம் appeared first on Dinakaran.

Tags : Suruliyaru Power Plant ,Chinnamanur ,RADCI ,WESTERN CONTINUATION MOUNTAIN ,SINNAMANUR ,Ciruliyaru Power Plant ,Dinakaran ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலைக்கிராமங்களில்...