×
Saravana Stores

மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை

 

திண்டிவனம், நவ. 8: மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர், வீட்டில் தனியாக இருந்தபோது கத்தியால் கழுத்தை அறுத்துகொண்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மேல்மாவிலங்கை கிராமத்தை சேர்ந்தவர் பெரியாழ்வார் என்பவரின் மகன் ராஜசேகர்(28). இவர் பொறியியல் பட்டதாரி. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் வரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

மேலும் இவர் கல்லூரியில் முதல் மாணவராகவும் திகழ்ந்து வந்துள்ளார். இவருக்கு படிப்பில் அதிக அளவில் ஈடுபாடு உள்ளதாகவும், அதிக படிப்பு காரணமாக வீட்டில் தனியாகவே தனி அறையில் இருந்து வந்துள்ளார். மேலும் சில நாட்களாக மதுவிற்கு அடிமையாகி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கோலியனூரில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை முடிந்து கடந்த 2ம் தேதி வீட்டிற்கு வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அவருக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி தொடர்ந்து பெற்றோர்களை கேட்டுள்ளார். பெற்றோர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் பெண் தர மாட்டார்கள் என கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த ராஜசேகர் நேற்றுமுன்தினம் இரவு தனது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

வயல் வேலை முடிந்து வந்த தாயார் மணிமொழி, தனது மகன் ராஜசேகர் ரத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வந்து ராஜசேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி வீட்டு தோட்டத்தில் கழுத்து அறுத்துகொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி வாலிபர் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tindivanam ,Rajasekhar ,Periyazhwar ,Melmavilangai ,Dindivanam ,Villupuram district ,Dinakaran ,
× RELATED பாஜ கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுகிறதா? ராமதாஸ் விளக்கம்