×

போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி திடீர் ஆய்வு

 

காரிமங்கலம், நவ.8: காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில், பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன் நேற்று முன்தினம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஸ்டேஷனில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், வழக்கு கோப்புகள் ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும், வழக்கு விசாரணை மற்றும் நிலுவை வழக்குகள் குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார்.

காரிமங்கலம் நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைத்து, விதிமுறைகளை மீறும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இரவு நேரத்தில் குற்றச்செயல்கள் நடக்காத வண்ணம், ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட போலீசாருக்கு டிஎஸ்பி அறிவுறுத்தினார். ஆய்வின் போது, இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்ஐ ஆனந்த்குமார், எழுத்தர் சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post போலீஸ் ஸ்டேஷனில் டிஎஸ்பி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : DSP ,Karimangalam ,Palakodu ,Manokaran ,Karimangalam Police Station ,Dinakaran ,
× RELATED கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு