×

நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

தூத்துக்குடி, ஜன. 1: தூத்துக்குடி காமராஜர் நகரை சேர்ந்தவர் பட்டுராஜா (27). கட்டிட தொழிலாளி. இவரது தாய் காளீஸ்வரி, தூத்துக்குடியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தவணை கடன் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு மாத தவணையாக ரூ.2,550 வீதம் 24 மாதங்கள் செலுத்த வேண்டும். ஆனால் காளீஸ்வரி, டிசம்பர் மாத தவணையை கட்டவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து தனியார் நிதி நிறுவன ஊழியரான தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த தங்க முனியசாமி மகன் ஜேசுராஜ் (21) என்பவர் தவணையை வசூலிக்க சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த காளீஸ்வரியின் மகன் பட்டுராஜா, ஜேசுராஜை அவதூறாக பேசி கைகளால் தாக்கியுள்ளார்.

இதுகுறித்து ஜேசுராஜ், தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பட்டுராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Paturaja ,Tuthukudi Kamarajar ,Kalishwari ,Tuticorin ,Dinakaran ,
× RELATED பெண்களே படியுங்கள் … படியுங்கள்…...