×

மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

 

திருவள்ளூர், நவ. 8: திருள்ளூரில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.  திருவள்ளூர், பெரியகுப்பத்தில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில், திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் ஆர்.கனகராஜன் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் உதவி செயற் பொறியாளர்கள் சற்குணன், ஜானகிராமன், சேகர், பாலச்சந்தர், யுவராஜ், உதவி பொறியாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலாஜி, ரமேஷ், குமரவேல், காஞ்சனா, வெங்கடேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மனுக்களை அளித்தனர். இதனை பெற்றுக் கொண்ட மேற்பார்வை பொறியாளர் ஏ.சேகர் மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

The post மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Consumers ,Redressal Forum ,Thiruvallur ,Thirullur ,Grievance Redressal Day ,Electricity Board Executive ,Thiruvallur, Periyakuppam ,Dinakaran ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!