- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு
- புழல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்
- திருவள்ளூர் மாவட்டம்
- சோளவரம் பஞ்சாயத்து யூனியன்
- கிரிஸ்துவர்...
- தின மலர்
புழல், டிச. 30: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம், திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்ட கிளை மாநாடு நேற்று சோழவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. வட்டக் கிளை தலைவர் கிறிஸ்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் மீராகண்ணன் முன்னிலை வகித்தார்.
வட்டக்கிளை மாநாட்டில், அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், சரண்டர் விடுப்பு தொகையை விடுவிக்க வேண்டும், விடுமுறை நாட்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் வட்ட கிளையின் தலைவராக முனுசாமி, செயலாளராக ருகேந்திரா ராவ், பொருளாளராக துர்கா ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
The post ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநாடு appeared first on Dinakaran.