×

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை திருட்டு

சென்னை: பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நந்தனம் விரிவாக்கம் பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் 6 பேர் பணியாற்றி வருகின்றனர். வழக்கம் போல் அலுவலகத்தில் பார்த்திபன் தனது அறையில் 12 சவரன் நகைகளை ஒரு பையில் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அலுவலகத்திற்கு வந்து நகைகளை பார்த்த போது 12 சவரன் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அலுவலகத்தில் பணியாற்றும் 6 பேரிடம் பார்த்திபன் கேட்டுள்ளார். திருடுபோனது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின்படி, சைதாப்பேட்டை போலீசார் நடிகர் பார்த்திபன் அலுவலகம் மற்றும் அருகில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்தினர். மேலும், அலுவலகத்தில் பணியாற்றும் 6 ஊழியர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய போது, நடிகர் பார்த்திபனிடம் உதவியாளராக பணியாற்றி வந்த கிருஷ்ணகாந்த் 12 சவரன் நகைகளை திருடியது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் 12 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். பிறகு நடிகர் பார்த்திபனிடம் உதவியாளர் கிருஷ்ணகாந்த் மன்னிப்பு கேட்டுக்கொண்டதை தொடர்ந்து பார்த்திபன் தனது புகாரை திரும்ப பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.இருந்தாலும் போலீசார் 12 சவரன் நகை திருடியது தொடர்பாக பார்த்திபன் உதவியாளர் கிருஷ்ணகாந்திடம் விசாரித்து வருகின்றனர்.

The post நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Parthiban ,Chennai ,Nandanam Extension ,Sawaran ,
× RELATED விழிப்புணர்வு ஊர்வலம்