×

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்க உத்தரவு

சென்னை: சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஓம்கார் பாலாஜி நவ. 13-ல் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். கோவையில் அக்.27-ல் நடந்த கூட்டத்தில் ஓம்கார் பாலாஜி வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் முன்ஜாமின் கோரி ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

The post சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி ஐகோர்ட்டில் ஆஜராகி மன்னிப்பு கேட்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Arjun Samphath ,Omkar Balaji ,ICourt ,Chennai ,Jagdish Chandra ,Goa ,Court ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு