×

கூட்டுறவு பயிர்க்கடன்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்


சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் கடன் முறையாக, முழுமையாக வழங்கப்படவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பயிர் செய்யும் பரப்பளவுக்கு ஏற்ப கடனை வழங்க வேண்டும். ஆனால் சில வங்கிகளில் கடனை குறைத்து வழங்குவதால் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

விவசாயிகளுக்கு தேவையான விதை நெல் மற்றும் விதைகளை வட்டார வேளாண் மையங்களில் வழங்குவதைப் போல் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் அவ்வப்போதே வழங்க வேண்டும். எனவே தமிழக அரசு, விவசாயிகளின் கோரிக்கைகளான பயிர் கடன், உரங்கள், விதைகள் ஆகியவற்றை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post கூட்டுறவு பயிர்க்கடன்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,TAMAGA ,President ,Dinakaran ,
× RELATED மண் சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு ஜி.கே.வாசன் இரங்கல்