- சென்னை
- முதல் அமைச்சர்
- குகேஷ்
- துலசிமதி
- நித்யஸ்ரீ
- மனிஷா ராமதாஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு விளையாட்டு துறை
- வீரகாந்தாஸ்
சென்னை: கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள உலக செஸ் சாம்பியன் குகேஷக்கும், அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். “தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயரட்டும்; தமிழ்நாட்டு விளையாட்டுத் துறை வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்தி பிடித்த நம் சாதனை வீரர்கள்; நம் சாதனை வீரர்களுக்கு ஒன்றிய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ள வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.