×
Saravana Stores

அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை முன் அனுமதி பெறவேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

டெல்லி: அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை முன் அனுமதி பெறவேண்டும் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் அமலாக்கத்துறை உரிய அனுமதி பெறாமல் அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த தெலுங்கானா உயர்நீதிமன்றம் அமலாகக்த்துறை பதிவு செய்த சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபை எஸ் ஓமா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 171-ஆவது பிரிவின் படி அரசு ஊழியர்மீது வழக்கு பதிவு செய்ய உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் என்று உறுதிபட தெரிவித்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளிபடி செய்து உத்தரவிட்டனர்.

The post அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை முன் அனுமதி பெறவேண்டும்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Telangana ,Telangana High Court ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED டெல்லி காற்று மாசு: உச்சநீதிமன்றம் அதிருப்தி