×

பாணாவரம் ரயில் நிலையத்தில் டிஸ்பிளேக்கள் அகற்றப்பட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி

*நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாணாவரம் : பாணாவரம் ரயில் நிலையம் வழியாக (சோளிங்கர்) சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள், வாராந்திர ரயில்கள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னை, காட்பாடி மார்க்கமாக பல்வேறு ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ரயில் நிலைய பிளாட்பாரத்தில் முன்பதிவு செய்த பயணிகளின் ரயில் பெட்டிகள் எந்த இடத்தில் வந்து நிற்கிறது என காட்டுவதற்காக பொருத்தப்பட்டிருந்த டிஸ்ப்ளேக்கள் பழுதானதால் கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டது.

இதனால் பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கும் முன் பதிவு செய்த பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டி எந்த இடத்தில் வந்து நிற்கிறது என்பது தெரியாமல் முன்னும் பின்னும் ஓடி சிரமப்பட்டு வருகின்றனர். இதில் முதியோர்,பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

இன்ஜினில் இருந்து பெட்டிகளின் எண்கள் குறித்து அறிவிக்கப்பட்டாலும் சரியான இடத்தில் பயணிகளால் கணித்து ஏற முடியவில்லை. இதனால் மிகுந்த அலைச்சலுக்கு பயணிகள் உள்ளாகின்றனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளாட்பாரத்தில் இருந்து அகற்றப்பட்ட டிஸ்பிளேக்களை பயணிகளின் நலன் கருதி மீண்டும் பொருத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பாணாவரம் ரயில் நிலையத்தில் டிஸ்பிளேக்கள் அகற்றப்பட்டதால் முன்பதிவு செய்த பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Panavaram railway ,Panavaram ,Panavaram railway station ,Solingar ,Chennai ,Katpadi ,
× RELATED பாணாவரம் அடுத்த வெளிதாங்கிபுரத்தில்...