×

தொழிலாளி வீட்டில் பைக்குகளுக்கு தீ வைப்பு

 

தூத்துக்குடி, நவ. 6: தூத்துக்குடி வெற்றிவேல்புரத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ்(50). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல தனது வீட்டாரின் பைக்குகளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் திடீரென விழித்த அவர் எழுந்து பார்த்தபோது பைக்குகள் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்தது. உடனடியாக அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.

இருப்பினும் ஒரு பைக் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. மேலும் இரு பைக்குகளும், வீட்டின் மேற்கூரை பகுதியும் சேதமடைந்தது. மர்மநபர்கள் பைக்குகளுக்கு தீ வைத்துச் சென்றதாக தெரிகிறது.இது குறித்து தகவலறிந்த வடபாகம் எஸ்ஐ சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

The post தொழிலாளி வீட்டில் பைக்குகளுக்கு தீ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Mohandas ,Vethivelpuram, Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி சங்கரப்பேரியில்...