- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு பொதுத்துறை
- கே.சந்திரமோகன்
- எம்.சுரேஷ்குமார்
- தமிழ்நாடு அரசு
- சென்னை உயர் நீதிமன்றம்
- கே.சந்திரமோகன்
- அரியலூர்
- ஆர்.கருப்பையா அரியலூர்
- தின மலர்
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளில் ஆஜராக வழக்கறிஞர்கள் கே.சந்திரமோகன், எம்.சுரேஷ்குமார் ஆகியோரை கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமித்து தமிழக அரசு பொதுத்துறை (சட்டம்) உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் கே.சந்திரமோகன், 1960ம் ஆண்டு அரியலூரில் பிறந்தார். இவரின் தந்தை ஆர்.கருப்பையா அரியலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராவார். பள்ளி படிப்பை அரியலூர் முடித்த சந்திரமோகன், சட்டப்படிப்பை திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் முடித்தார். 1985ம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தார். முதலில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழில் செய்தார். கனரா வங்கி, இந்தியன் வங்கி ஆகியவற்றின் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
பின்னர் 2000 ஆண்டு முதல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தொழில் செய்து வருகின்றனர். பின்னர் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினராக கடந்த 25 ஆண்டுகளாக உள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் தலைவராக செயல்பட்டுள்ளார். 2009ம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரை மத்திய அரசு வழக்கறிஞராக செயல்பட்டுள்ளார். தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் சட்டத்துறை மாநில தலைவராக உள்ளார். வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார் கடந்த 1971ம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.
இவரின் தந்தை முத்தையா மாவட்ட நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 1994ம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்த அவர் சென்னை,மதுரை உயர் நீதிமன்ற தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். தமிழ்நாடு மின்சார வாரியம், தெற்கு இரயில்வே நிர்வாகம் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வழக்கறிஞராக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். இவர்களோடு சேர்த்து தற்போது சென்னை ஐகோர்ட்டில் 10 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ஆஜராகவுள்ளனர்.
The post சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜராக 2 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனம்: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.