×

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர்களாக 234 பேரை நியமிக்க முடிவு: திருமாவளவன் தகவல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள 144 மாவட்டச் செயலாளர்களில் அதிக புகார் உள்ளவர்கள், எல்லை பிரச்னைகளை கருத்தில் கொண்டு ஒரு சிலரை அப்பொறுப்பில் இருந்து விடுவிக்க உள்ளோம். புதிதாக நியமிக்கப்பட இருக்கும் 234 மாவட்டச் செயலாளரும் அந்தத் தொகுதியின் பெயரில் மாவட்டச் செயலாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். ஒன்றிய நிர்வாகத்திற்கும் மற்றும் அணிகளின் மாநில- மாவட்ட பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.

மாவட்ட நிர்வாகத்தில் குறைந்தது 9 பேரும் அதிகபட்சம் 11 பேரும் இடம் பெறுவார்கள். நவம்பர் 15 க்குள் அனைத்து நிலை பொறுப்புகளுக்கும் பரிந்துரை குழுவிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்ட அடிப்படையில் நியமிக்கப்படும் பரிந்துரை குழுக்கள் இன்றி, மேலும் 5 மண்டல உயர்நிலைக் குழுவும் அமைக்கப்பட இருக்கிறது. வடமண்டலம், மேற்கு மண்டலம், மைய மண்டலம், டெல்டா மண்டலம், தென் மண்டலம் என்று 5 மண்டல உயர்நிலைக் குழு அமைக்கப்பட இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர்களாக 234 பேரை நியமிக்க முடிவு: திருமாவளவன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Liberation Tigers Party ,Thirumavalavan ,CHENNAI ,
× RELATED எனக்கு விஜயுடன் எந்த முரண்பாடும்...