×
Saravana Stores

காஸா மீதான தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்படும்: மிச்சிகன் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் தீவிர பரப்புரை

அமெரிக்கா: அமெரிக்காவின் 60வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கு ஒரு நாளே எஞ்சி இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸும், டொனால்ட் டிரம்ப்பும் சூறாவளியாக சுழன்று பிரச்சாரம் செய்தனர். துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளருமான கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பும் ஞாயிறு இரவு தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

மிச்சிகனில் பிரச்சாரம் செய்ய வந்திருந்த கமலா ஹாரிஸை அவரது ஆதரவாளர்கள் பெரும் கரவொலி எழுப்பி வரவேற்றனர். பின்னர் பேசிய அவர் காஸா, லெபனான் மீது நடைபெற்று வரும் தாக்குதல்கள் பெரும் கவலை அளிப்பதாக குறிப்பிட்டார். அவருக்கு அதிபராக தான் தேர்வு செய்யப்பட்டால் இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

The post காஸா மீதான தாக்குதல் முடிவுக்கு கொண்டு வரப்படும்: மிச்சிகன் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் தீவிர பரப்புரை appeared first on Dinakaran.

Tags : on Gaza ,Kamala Harris ,Michigan ,USA ,Donald Trump ,President of the ,United States ,vice president ,Democratic Party ,Republican Party ,Gaza ,Michigan Province ,Dinakaran ,
× RELATED தேர்தல் தோல்வியை ஏற்கிறேன்: கமலா ஹாரிஸ்