×

காலர்டியூன் மூலம் விரும்பாத மொழியை திணிப்பதா?: காங்கிரஸ் எம்.பி. கண்டனம்

டெல்லி: காலர்டியூன் மூலம் வாடிக்கையாளர்கள் விரும்பாத மொழியை பி.எஸ்.என்.எல். திணிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஆர்.சுதா கண்டனம் தெரிவித்துள்ளார். வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமையை பி.எஸ்.என்.எல். மீறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்களுக்கு என்ன பாடல் காலர்டியூனாக வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட உரிமை. காலர்டியூனில் இருந்து விலகுவதில் சிக்கல் இருப்பதுடன் சரிவர இயங்கவில்லை. விரும்பாத மொழியை திணிப்பதை காட்டும் அக்கறையை பி.எஸ்.என்.எல். முன்னேறுவதில் காட்டலாம் என அவர் கூறியுள்ளார்.

 

The post காலர்டியூன் மூலம் விரும்பாத மொழியை திணிப்பதா?: காங்கிரஸ் எம்.பி. கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Callitune ,M. B. ,Condemnation ,Delhi ,Callitune S. N. L. ,Congress ,M. B. R. SUDA ,S. N. L. ,Congressman ,M. B. Condemnation ,Dinakaran ,
× RELATED விதிகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள்...