டெல்லி: தங்க முதலீட்டில் பலரால் ஈர்க்கப்பட்ட திட்டமான தங்கப் பத்திரம் திட்டம் அடுத்த ஆண்டு முதல் ஒன்றிய அரசால் கைவிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்களை பெருத்தவரை சேமிப்பு என்றால் தங்கத்தில் முதலீடு செய்வது. நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் வாங்குவதை எப்போது பாதுகாப்பாக கருதுகின்றனர். இதனால் தங்கத்தின் விலை எப்போது ஏறுமுகத்தில் உள்ளது. இப்படி நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்யப்பட்ட நிலையில், Gold Bond என்ற தங்கப்பத்திர திட்டம் கடந்த 2015ம் ஆண்டு ரிசர்வ் வங்கி கொண்டுவந்தது.
அதன்படி தங்க நகைகளை வாங்கி வைப்பதையும் தாண்டி டிஜிட்டல் முறையில் பத்திரமாக வாங்கி வைப்பது பாதுகாப்பானதாக தங்க முதலீட்டாளர்கள் மத்தியில் பார்க்கப்பட்டது. தங்கப்பத்திரத்தின் மெச்சூரிட்டி period முடிந்த பிறகு தங்க விலையை ஆண்டுதோறும் சேரும் வட்டியோடு சேர்த்து பயனாளர்களுக்கு திருப்பி தரவேண்டும். துவக்கத்தில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை தீர்க்கவும், அதிகப்படியாக தங்க இறக்குமதியை தடுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தங்கப் பத்திரம் திட்டம்.
ஆனால் நாளடைவில் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருவதால் தங்கப் பத்திரத்தால் அரசுக்கு வரக்கூடிய வருமானத்தையும் விட திருப்பி கொடுக்கும் செலவு அதிகரித்துள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கு நிதிசுமை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த தங்கப் பத்திர திட்டம் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முறையான அறிவிப்பு அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிர்ச்சி.. தங்கப் பத்திர திட்டம் இனி இல்லையா?: ஒன்றிய அரசு அதிரடி!! appeared first on Dinakaran.