×

தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய தியாகிகளை வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்

சென்னை: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய தியாகிகளை வணங்குகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு:

தெற்கிலும் வடக்கிலும் பல இடங்களில் போராடி தமிழ்நாட்டின் எல்லையைக் காத்த மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள், நவம்பர் 1, தமிழர் வாழும், தமிழ் பேசப்படும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காகப் போராடிய அனைவரையும் எல்லைப் போராட்டத் தியாகிகள் நாளில் போற்றி வணங்குகிறேன்.

The post தமிழர் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்க போராடிய தியாகிகளை வணங்குகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Tamil ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Border Struggle Martyrs' Day ,
× RELATED போதையில்லா தமிழ்நாடு” என்ற தலைப்பில்...