×

கர்நாடகா மலைக் கோயிலில் தவறி விழுந்து 12 பேர் காயம்..!!

கர்நாடகா: கர்நாடகா மலைக் கோயிலில் மலை ஏறும் வழியில் வழுக்கி விழுந்ததில் 12 பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்த பக்தர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் அருகே உள்ள தேவிரம்மா மலைக்கோயிலில் தீபாவளியை ஒட்டி பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். 3,000 அடி உயரம் உள்ள மலை மீது அமைந்துள்ள கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கயிறை பிடித்தபடி மலை ஏறினர். தொடர் மழையால் மலையேறும் வழியில் ஈரம் காரணமாக கோயிலுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில் பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

The post கர்நாடகா மலைக் கோயிலில் தவறி விழுந்து 12 பேர் காயம்..!! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Karnataka hill ,Deviramma hill temple ,Chikkamagalur ,Diwali ,Karnataka hill temple ,
× RELATED கர்நாடகாவில் பள்ளி பேருந்தை தொட்டதும் தீயில் கருகும் பெண்