×
Saravana Stores

திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடு நியமனம்

திருமலை: திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடுவை நியமித்து ஆந்திரப் பிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோயிலுக்கு 24 அறங்காவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்

வாரியத்தின் உறுப்பினா்களாக ஆந்திர மாநிலத்திலிருந்து 3 எம்எல்ஏக்கள், தெலங்கானாவிலிருந்து 5 எம்எல்ஏக்கள், கா்நாடகத்திலிருந்து 3 எம்எல்ஏக்கள், தமிழகத்திலிருந்து 2 எம்எல்ஏக்கள், குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களிலிருந்து தலா ஒரு எம்எல்ஏ ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

முன்னாள் மத்திய அமைச்சா் பனபாகா லட்சுமி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து, பாரத் பயோடெக் இணை நிறுவனா் சுசித்ரா எல்லா ஆகியோரும் வாரியத்தின் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், ஆந்திர மாநிலத்தில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சாா்பில் மேலும் ஒரு உறுப்பினா் விரைவில் நியமிக்கப்படுவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மூலம், தேவஸ்தானத்துக்கான புதிய வாரியம் தொடா்பாக கடந்த சில நாள்களாக நிலவி வந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

The post திருமலை தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பொல்லினேனி ராஜகோபால் நாயுடு நியமனம் appeared first on Dinakaran.

Tags : Polleneni Rajagopal Naidu ,Thirumalai ,Devasthana ,Andhra Pradesh Government ,Tirupathi ,Thirumalai Devastana ,AP STATE ,TELANGANA ,KANNATAKA ,Pollineni Rajagopal Naidu ,
× RELATED நிலம் கையகப்படுத்த வந்த கலெக்டர், அதிகாரிகளை தாக்கிய 55 பேர் கைது