- வனத்துறை?: பொது
- மைசூர்
- மைசூர் மாவட்டம் எச். டி. தசரத்தன், என்.
- கோட்டை டவுன் ஹவுசிங்போர்டு
- நாகராஜ்
- விவேக்
- குருமல்லு
- சன்னப்பா
- சோமன்னா
- சன்னையா
மைசூரு: மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை டவுன் ஹவுசிங்போர்டை ஒட்டி நிலங்களை வைத்துள்ள விவசாயிகளான தசரதன், என். நாகராஜ், விவேக், குருமல்லு, சண்ணப்பா, சோமண்ணா, சண்ணய்யா ஆகியோரின் வயல்களில் கடந்த ஒரு மாத இடைவெளியில் 100 அடி இடைவெளியில் 4 சிறுத்தைகள பிடிப்பட்டது. இப்போது மற்றொரு 7 வயது சிறுத்தை சிக்கியுள்ளது ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சிறுத்தைகள் இப்பகுதியில் உள்ள விவசாயிகளின் பசு, கன்றுகள், ஆடுகள் மற்றும் வளர்ப்பு நாய்களை வேட்டையாடி வந்தது. ஒவ்வொரு முறை சிறுத்தை சிக்கிய போதும் சிறுத்தை நடமாட்டத்தை விவசாயிகள் பார்த்துள்ளனர்.
இதனால், வயலில் கூண்டு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நாள்தோறும் கூண்டில் நாய்களை கட்டி வைத்திருந்தனர். இந்தநிலையில், முன்னாள் எம்எல்ஏ என்.நாகராஜ் அவருக்கு சொந்தமான வயலில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் 7 வயது சிறுத்தை சிக்கியுள்ளது. இப்பகுதியில் பிடிப்பட்ட 5வது சிறுத்தை இது. ஒரு இடத்தில் இரண்டு மூன்று சிறுத்தைகள் பிடிப்படுவது வழக்கம். ஆனால், ஒரே இடத்தில் இத்தனை சிறுத்தைகள் பிடிப்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
சிறுத்தை பிடிப்பட்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மண்டல அதிகாரி பூஜா பேசியதாவது: இப்பகுதியில் 5வது சிறுத்தை பிடிப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவர் சிறுத்தையின் உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்த பின்னர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்படும் என்றார். அப்போது அவருடன் துணை மண்டல அதிகாரி பரமேஷ் மற்றும் சிறுத்தை விரைவு பாதுகாப்பு படை ஊழியர்கள் இருந்தனர்.
The post வனத்துறை கூண்டில் சிறுத்தை சிக்கியது appeared first on Dinakaran.