×
Saravana Stores

நவம்பர் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்.. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடுகளில் புதிய விதிமுறை!!

டெல்லி: ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடு, நிரந்தர வைப்பு நிதி போன்றவை தொடர்பான ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலாகின்றது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளின் படி எஸ்.பி.ஐ. வங்கியின் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணம் மாதத்திற்கு 3.75%ஆக அதிகரிக்கப்படுகிறது. ஒருமாத பில்லிங் காலத்தில் மின்கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்காக செலுத்தும் கட்டணம் ரூ.50,000க்கு மேல் இருந்தால் கூடுதலாக 1% கட்டணம் விதிக்கப்படும்.

இதேபோல ஐசிஐசிஐ வங்கியின் நவம்பர் 15 முதல் கட்டண விகிதங்கள் மற்றும் கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகள் திட்டங்களை மாற்றங்களை செய்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படும் இந்தியன் வங்கியின் சிறப்பு நிரந்தர வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு நவம்பர் 30 தேதியே கடைசிநாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் மட்டுமின்றி ரயில்வே துறையிலும் நவம்பர் 1 முதல் நடைமுறை மாற்றங்கள் அமலாகிறது. அதன்படி முன்பதிவு செய்வதற்கான காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

The post நவம்பர் 1 முதல் அமலாகும் புதிய மாற்றங்கள்.. ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, கிரெடிட் கார்டு பயன்பாடுகளில் புதிய விதிமுறை!! appeared first on Dinakaran.

Tags : New Delhi ,RBI ,SBI ,Dinakaran ,
× RELATED முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட்...