×
Saravana Stores

ரயில்களில் இனி 60 நாட்களுக்கு முன்புதான் ரயில் டிக்கெட் புக்கிங்.. இன்று முதல் புதிய நடைமுறை அமல்..!!

டெல்லி : ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் புதிய நடைமுறை இன்று (நவ.1) முதல் அமலுக்கு வந்துள்ளது. வெளியூர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்த விலையில் அதிக சௌகரியத்துடன் செல்வதற்கு ரயில் பயணத்தை மேற்கொள்கின்றனர். அதிகப்படியான நபர்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்வதால் வார நாட்கள், வார இறுதி நாட்கள் என எந்த பாரபட்சமும் இன்றி ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக விழா காலங்களில் ரயில் டிக்கெட் புக்கிங் செய்வது கடினமாக இருக்கும். அதற்காக ரயில்வே கொண்டு வந்த திட்டம்தான் அட்வான்ஸ் புக்கிங்.

பண்டிகை காலம் தொடங்கி சாதாரண ரிசர்வேஷன் வரை அனைத்திற்கும் 120 நாட்கள் முன்னரே பதிவு செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் இனி அப்படி இல்லை இனிமேல் பயணம் செய்யும் நாள் தவிர்த்து அதற்கு முன்னதாக 60 நாட்கள் முன்கூட்டி மட்டுமே ரயில் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும். இந்த புதிய விதி நவம்பர் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது என ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த விதியானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னதாக 120 நாள் முன்கூட்டிய ரயில் டிக்கெட் புக் செய்திருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்கள் தங்கள் புக்கிங் தேதிகளில் பயணிக்கலாம். நேற்று இரவு (31.10.2024) வரை செய்யக்கூடிய 120 நாள் முன்கூட்டிய ரயில் டிக்கெட் புக்கிங் செல்லுபடியாகும் என ரயில்வே நிர்வாக ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தது. 31.10.2024 வரை புக்கிங் செய்யும் 60 நாட்களுக்கு மேலான ரயில் டிக்கெட்களை கேன்சல் செய்ய அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ரயில்வே கடந்த ஓராண்டில் குறிப்பிட்ட மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்குப் பயணிக்கும் பயணிகளின் கணக்கெடுப்பை பலமுறை நடத்தியது. ஒரு வருடத்தில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் அல்லது நகரத்திற்கு பலமுறை பயணம் செய்யும் 50 லட்சத்திற்கும் அதிகமான பயணிகளைக் கண்டறிந்துள்ளது. இத்தகைய பயணிகளின் பயண வரலாற்றின் அடிப்படையில், சிறப்பு ரயில்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில் பண்டிகைக் காலங்களில் ரயில்வே அவர்களுக்கு செய்திகளை அனுப்புகிறது. இதனால் அவர்கள் தங்கள் வழித்தடத்தின் சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரயில்களில் இனி 60 நாட்களுக்கு முன்புதான் ரயில் டிக்கெட் புக்கிங்.. இன்று முதல் புதிய நடைமுறை அமல்..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Dinakaran ,
× RELATED கோவையில் சாலை விபத்தில் உயிரிழந்த...