×

ஆத்தூர் அருகே பரபரப்பு ஓட்டலுக்குள் கார் புகுந்து விவசாயி பலி : 2 பேர் சீரியஸ்

Car, accident, salem, attur*உணவு வாங்க வந்த போது பரிதாபம்

ஆத்தூர் : ஆத்தூர் அருகே, ஓட்டலுக்குள் புகுந்த கார் மோதிய விபத்தில், விவசாயி உடல் நசுங்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(50). இவர் நேற்று தனது காரில், கெங்கவல்லியில் இருந்து ஆத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சினி அருகே வந்த போது, திடீரென நிலைதடுமாறி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் இருந்த டூவீலர் மீது மோதியது.

பின்னர், அருகில் இருந்த ஓட்டலுக்குள் புகுந்தது. அப்போது, ஓட்டலில் உணவு வாங்கி கொண்டிருந்த தென்காசி மாவட்டம், திருவேங்கடம் கொலகுண்டா குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி (34) என்பவர் மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில், அழகர்சாமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், ஓட்டலில் உணவு வாங்க வந்திருந்த மேலும் 2பேர் படுகாயமடைந்தனர். இதை கண்ட அருகில் இருந்தவர்கள், படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ரூரல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விபத்தில் பலியான அழகர்சாமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி வந்த செல்வராஜை கைது செய்தனர்.

அழகர்சாமி தென்காசியில் இருந்து நெல் அறுவடை இயந்திரத்தை சரி செய்வதற்காக, அங்கிருந்து மஞ்சினிக்கு வந்து பட்டறையில் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, தன்னுடன் வந்தவர்களுக்கு உணவு வாங்க சென்ற போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.

The post ஆத்தூர் அருகே பரபரப்பு ஓட்டலுக்குள் கார் புகுந்து விவசாயி பலி : 2 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Attur ,Athur ,Salem District ,Illuppanantham ,
× RELATED அமித்ஷா பற்றி ஜெயக்குமார் கூறியதுதான் என் நிலைப்பாடு: எடப்பாடி நழுவல்