- ஜெயக்குமார்
- அமித் ஷா
- எடப்பாடி
- ஆத்தூர்
- அம்பேத்கர்
- எடப்பாடி பழனிசாமி
- ஆத்தூர், சேலம் மாவட்டம்
- ஐஜேகே கட்சி
- தின மலர்
ஆத்தூர்: அம்பேத்கர் பற்றி அமித்ஷா பேசியது பற்றிய கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல், ஜெயக்குமார் கூறிய கருத்துதான் என் நிலைப்பாடு என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஐஜேகே கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வரதராஜன் மற்றும் மாநில மகளிர் அணி செயலாளர் அமுதா தலைமையில், ஐஜேகே உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகிய ஆயிரம் பேர் அதிமுகவில் இணையும் விழா நேற்று நடந்தது. இதில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசுகையில், பள்ளிச் சிறுமிகள், ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.
அனைத்து ஆசிரியர்களையும் குறை கூறவில்லை. ஒருசில ஆசிரியர்கள் செய்த தவறு அனைவரையும் பாதிக்கிறது. மக்களை நம்பி நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். 2026ல் பிரமாண்ட கூட்டணி அமைப்போம், பலமான கூட்டணி அமைப்போம் என்றார். பின்னர் நிருபர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘‘ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கர் குறித்து குறை கூறிய கருத்துக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த விளக்க கருத்துகள் தான் என்னுடைய நிலைப்பாடு’’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
The post அமித்ஷா பற்றி ஜெயக்குமார் கூறியதுதான் என் நிலைப்பாடு: எடப்பாடி நழுவல் appeared first on Dinakaran.