- சென்னை
- -போதை மருந்துகள்
- மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு
- சென்னை மூலக்கடை
- போதைப்பொருள் தடுப்புப் பிரிவு
- தின மலர்
சென்னை:சென்னையில் 27 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.7 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்துள்ளனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சிலர் உயர் ரக போதைப் பொருட்களை கடத்துவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு க்கு ரகசிய தகவல் கிடைத்தது. மூலக்கடை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் 2 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை சோதனையிட்டபோது அவர்களிடம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கன்னியாகுமரி மாவட்டம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கையைச் சேர்ந்த விஜயகுமார் மற்றும் சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன் வீட்டிலும் சோதனை நடத்தி போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.2.700 கிராம் போதைப் பொருள் பறிமுதலானது. இதன் சர்வதேச மதிப்பு 27 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. மேலும் 15 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னையில் ரூ. 27 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்: 2 பேர் கைது : போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி appeared first on Dinakaran.