×

டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு கைதிகள் பயன்படுத்தப்படுகிறார்களா? சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாகக் கூறி அவரை தாக்கியதாகவும், அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், டிஐஜி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது. மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, காரசார வாதங்களுக்கு பிறகு நீதிபதிகள் தீர்ப்பை தள்ளிவைத்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள், டிஐஜிக்கு எதிரான விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ளலாம். இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரிக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி துறை ரீதியான நடவடிக்கையை தாமதிக்கக் கூடாது.

சிறை கைதிகள் இது போன்று வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்களா? என்பது குறித்து தொடர்ந்து சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய வேண்டும். வீட்டுப்பணிகளுக்கு கைதிகளை மட்டுமல்ல ஆர்டர்லியாக காவல்துறையினரையும் பணியில் ஈடுபடுத்தக்கூடாது.அதிகாரிகளுக்கு ஏற்கனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இது போன்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் அது தீவிரமாக கவனிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.

 

The post டிஐஜி மீது துறைரீதியான நடவடிக்கை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு கைதிகள் பயன்படுத்தப்படுகிறார்களா? சிறைத்துறை டிஜிபி ஆய்வு செய்ய ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DIG ,iCourt ,DGB ,Chennai ,Sivakumar ,Kṛṣṇagiri ,Vellore Prison ,Kalawati Chennai High Court ,Dinakaran ,
× RELATED சார்-பதிவாளருக்கு முன்ஜாமின் வழங்க ஐகோர்ட் மறுப்பு